உம்மை போற்றி பாடுவேன்

 

உம்மை போற்றி பாடுவேன்

உம்மை புகழ்ந்து பாடுவேன்

உம்மை வாழ்த்தி பாடுவேன் - இயேசையா

….. ஓசன்னா-4 - (2)

 

பூமியின் குடிகளே

கர்த்தரை பாடுங்கள்

கெம்பீரமாகவே

உயர்த்தியே பாடுங்கள் -….

 

கர்த்தரின் மந்தையே

அவர் சத்தத்தை கேளுங்கள்

ஆனந்த சத்தமாய்

அவர் பாதம் பணியுங்கள்  - ….

 

அவர் வாசலில் துதியுடன்

ஆடிப்பாடியே செல்லுவோம்

கர்த்தர் பெரியவர்

எல்லா துதிக்கும் பாத்திரர்; -

 

நம் தேவன் நல்லவர்

மாறா கிருபையுள்ளவர்

அவர் உண்மையுள்ளவர்

தலைமுறைக்கும் இரங்குவார் -